
தஞ்சை பழையப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 புதிய தாழ்தளப் பேருந்து சேவையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே செமஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். பொதுவாக விடுப்பு காலங்களில் தான் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு என்பது இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.