இனி மேல் குட்டைப் பாவாடை போட்டுக்கலாம் ! போராடி வெற்றி பெற்ற மாணவிகள் !!

By Selvanayagam PFirst Published Sep 17, 2019, 11:20 PM IST
Highlights

ஹைதராபாத்தில் உள்ள  புனித ஃபிரான்சிஸ் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து உடை அணிவதில் விதித்த தடையை கல்லூரி  நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து இனி மாணவிகள் குட்டைப்பாவாடை அணிந்து வரலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த பேகம்பேட்டில் புனித ஃபிரான்சிஸ் மகளிர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. கல்லூரி நிர்வாகம் பல்வேறு விஷயங்களில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்துவருகிறது.

நேரம் தவறாமை, ஒழுக்கம் உள்ளிட்ட வரிசையில் மாணவிகளின் உடை விவகாரத்திலும் அதிரடி உத்தரவை பிறப்பித்து கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

அண்மையில்  மாணவிகள் கல்லூரிக்கு வரும்போது முட்டிக்கு கீழ் குர்தா அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கிறது. கல்லூரி நிர்வாகம் தங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதாகக் கூறி மாணவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்..

நேற்று நடைபெற்ற  போராட்டத்தில் ஆடைக்கட்டுப்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று மாணவிகள் முழக்கங்கள் எழுப்பினர்.


இதையடுத்து கல்லூரித் தலைவர் சாண்ட்ரா முட்டிக்கு கீழ் குர்தாவை அணிய வேண்டும் என்ற விதியை நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளர்.

click me!