‘பாகுபலி’யாக மாறிய மெட்ரோ ஸ்ரீதரன் ; ‘பல்வாள் தேவனான’ மோடி - கொச்சி விழாவில் நடந்த ருசிகர சம்பவம்...!!!

 
Published : Jun 18, 2017, 09:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
‘பாகுபலி’யாக மாறிய மெட்ரோ ஸ்ரீதரன் ; ‘பல்வாள் தேவனான’ மோடி - கொச்சி விழாவில் நடந்த ருசிகர சம்பவம்...!!!

சுருக்கம்

Metro Sridharan who became Pakubali and Palwalthevan is a modi by intresting incident in Kochi festival

கொச்சி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில், பிரதமர் மோடிக்கு  கிடைத்த வரவேற்பைக் காட்டிலும், ‘மெட்ரோ மேன்’ எனச் சொல்லப்படும் சிறீதரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராஜமவுலி இயக்கத்தில் ‘பாகுபலி- 2’ம்பாகம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் ஒரு காட்சியில் பல்வாள் தேவன் அரசணாக முடிசூட்டப்பட்டு, பதவி ஏற்கும்போது மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்காமல் அமைதியாக, சோகத்துடன் காட்சி அளிப்பார்கள்.

அதேசமயம், மகேந்திர பாகுபலி படைத் தளபதியாக பதவி ஏற்கும் போது மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து, கரகோஷமிட்டு, சத்தமிட்டு தங்களின் மகிழ்ச்சியையும், ஆர்ப்பரிப்பையும், ஆரவாரத்தையும் வௌிப்படுத்துவார்கள்.

இதேபோன்ற சம்பவம்தான் கொச்சி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் அரங்கேறியது. பிரதமர் மோடி பேச வந்தபோது, மக்கள் அமைதியாக இருந்து, சிறிய அளவில் கைதட்டி ஒரு முறைக்காக வரவேற்பு கொடுத்தனர்.

ஆனால், மெட்ரோ மேன் சிறீதரன் பெயரை உச்சரித்தது முதல்,  மேடைக்கு பேச வரும்வரை மக்கள் காதை பிளக்கும் வகையில் தைட்டி, விசில் சத்தத்தை எழுப்பி தங்களின் நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்தனர். மக்கள் அடித்த விசிலுக்கும், கைதட்டலும், ஏறக்குறைய 5 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதை பிரதமர் மோடியே எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

கொச்சி மெட்ரோ தொடக்க விழாவில்  சிறீதரன் பெயர், பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. பிரதமர் மோடியுடன், ஒரே மேடையில் அமர வைக்கவும், நிற்கவும், பயணிக்கவும் பிரதமர் பாதுகாப்பு பரிவினர் தொடக்கத்தில் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், கேரளா மக்கள் மட்டுமல்லாது, அரசும் படபடத்துப் போயினர்.

உடனடியாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய முதல்வர் பினராயி விஜயன், சிறீதரன் கண்டிப்பாக தொடக்க விழா மேடையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநில அரசின் வலியுறுத்தலுக்குபின் சிறீதரன் அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கவிழாவில், சிறீதரனை பார்க்கும்போதெல்லாம், அவரின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் கொச்சிக்கு மெட்ரோ ரெயில் கொடுத்ததற்காக அவருக்கு தங்களின் நன்றியையும், வரவேற்பையும் தங்களின் கைதட்டல், விசில் மூலம் மக்கள் உணர்த்திக் கொண்டே இருந்தனர்.

உண்மையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவாக இருந்தபோதிலும், அதில் ‘பாகுபலியாக’ திகழ்ந்தவர், கேரளத்துகாரரும், மெட்ரோ மேன் எனச்சொல்லப்படும் சிறீதரன் என்றால் மிகையில்லை.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!