
கேரள மாநிலத்தில் பரவி வரும் வினோதமான காய்ச்சலால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மக்கள் அனைவரும் அரசின் சுகாதாரப் பணிகளுக்கு ஒத்துழைக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
எச்1என்1, லெப்டோஸ்பைரோசிஸ், டெங்கு என பல வகையான காய்ச்சலால் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 103 பேர் பலியாகியுள்ளனர். இதில் 53 பேர் எச்1என்1 காய்ச்சலிலும், 13 பேர் டெங்கு காய்ச்சிலும் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
கழிவுப்பொருட்களை கண்ட இடங்களில் வீசி எறிவதன் காரணமாக அங்கிருந்து கொசுக்கள் அதிகமான உற்பத்தியாகி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆதலால், தொற்று நோய்களையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்த சுதாதாரம்தொடர்பான விழிப்புணர்வு இருப்பது அவசியம்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுய உதவி குழுவின் பிரதிநிதிகள், சமூக-கலாச்சார குழுக்கள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவை சுகாதார விழிப்புணர்வில் அக்கறை காட்ட வேண்டும்.
அரசு சார்பில் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை அந்தந்த உள்ளூர் மக்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் திடக்கழிவு மேலாண்மையும், கொசுக்கள் ஒழிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருவதால், காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ேமலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு இருக்கின்றன, டாக்டர்களும் பணியில் சரியாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் பினராயிவிஜயனை அவரின் இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தில் பரவிவரும் மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த தேவையாகநடவடிக்ைககளை விரைவுப்படுத்த சென்னிதலா கோரிக்கை விடுத்தார்.
அதன்பின், சென்னிதலா நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த ஜனவரியில் இருந்து மர்ம காய்ச்சலால் இதுவரை 117 பேர் பலியாகி இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும்அதிகமான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இளைஞர்களும், குழந்தைகளும் அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதால் அவசர சூழலாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா மந்தமாக செயல்படுகிறார்’’ எனக் குற்றம் சாட்டினார்.