Mehbooba Mufti: இந்தியாவில் அடிப்படை உரிமைகளே ஆடம்பரமாகிவிட்டன’: தலைமை நீதிபதிக்கு மெகபூபா முப்தி கடிதம்

By Pothy RajFirst Published Dec 31, 2022, 2:41 PM IST
Highlights

இந்தியாவில் அடிப்படை உரிமைகளே ஆடம்பரமாகிவிட்டன. சமூக, அரசியல் மற்றும் மதவிஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்குதான் உரிமைகள் கிடைக்கின்றன என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் அடிப்படை உரிமைகளே ஆடம்பரமாகிவிட்டன. சமூக, அரசியல் மற்றும் மதவிஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்குதான் உரிமைகள் கிடைக்கின்றன என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2019ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் அளிக்கும் 370 பிரிவு ரத்து செய்தபின், மாநிலத்தின் மீதான நம்பிக்கைப் பற்றாக்குறையும், ஒதுக்கிவைப்பதும் அதிகரித்துள்ளது என்று மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார் 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாத யாத்திரைக்கு புல்லட் காரா? மத்திய அரசுக்கு ராகுல் பதிலடி

இந்தியாவில் நிலவும் சூழலைப் பார்த்து குறிப்பாக ஜம்மு காஷ்மீர் நிலையைப் பார்த்து, ஆழ்ந்த கவலையுடன் அக்கறையுடனும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

ஜனநாயகத்தில் சாதாரண வழக்குகளில் ஜாமீன் வழங்க கீழ் நீதித்துறையின் இயலாமை குறித்த உங்கள் சமீபத்திய அவதானிப்புகள், நாளேடுகளில் வெளியான ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிடப்படுவதை விட, எங்களுக்களை நோக்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அனைவருக்கும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் வெட்கக்கேடான முறையில் இங்கு தடுக்கப்படுகின்றன.
துரதிர்ஷ்டமாக, இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் இங்கு ஆடம்பரமாகியுள்ளன. அரசின் அரசியல், மதவிவகாரங்கள், சமூக விவகாரங்களில் யாரெல்லாம் ஒத்திசைவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு உரிமை தரப்படுகிறது.

25 ஆண்டுகளுக்குப்பின்! தமிழர்களின் பெருமையைக் கூறும் தொப-வின் 'அறியப்படாத தமிழகம்' நூல் ஆங்கிலத்தில் வெளியீடு

இதில் கவலையளிக்கும் வகையில், இந்தியாவின் சித்தாந்தமான பன்முகத்தன்மை, மத பன்மைத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பலம் களையெடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க சிறுபான்மையினர் நசுக்கப்பட்டு சமூக அ ரசியல் பொருளாதார விளம்பில் வைக்கப்படுகிறார்கள். 

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காஷ்மீருக்கு வெளியே உள்ள வெவ்வேறு மாநிலச் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக வாடுகிறார்கள். அவர்கள் சட்ட உதவி பெறுவதற்கு வசதியில்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

2019ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் அளிக்கும் 370 பிரிவு ரத்து செய்தபின், மாநிலத்தின் மீதான நம்பிக்கைப் பற்றாக்குறையும், ஒதுக்கிவைப்பதும் அதிகரித்துள்ளது 
பாஸ்போர்ட் ஒரு அடிப்படை உரிமைஆனால் அது காரணமின்றி முழுமையாக முடக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் தடுக்கப்படுகிறார்கள்.

இந்த இருண்ட சூழ்நிலைகளில் நம்பிக்கையின் ஒரே நெருப்பு, நீதித்துறை மட்டும்தான். இந்தத் தவறுகளை நீதித்துறைதான் சரிசெய்ய முடியும், ஆனால், நீதித்துறையுடனான எங்கள் அனுபவம் இதுவரை அதிக நம்பிக்கையைத் தூண்டவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது.

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தன்னை விடுவிக்க, உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைக்க ஓர் ஆண்டுதேவைப்பட்டது

Heeraben Modi: பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் இரங்கல்

தலைமை நீதிபதி தலையிட்டு நீதி வழங்கிட வேண்டும். ஜம்மு காஷ்மீரின் மக்களின் மரியாதை, மனித உரிமை, அரசியலமைப்புச்சட்ட உரிமைகள், ஜனநாயக அரசியல் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

இவ்வாறு முப்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

click me!