‘எம்எல்ஏ-தான் தேவை, விற்பனையாளர் அல்ல’: மேகாலயா சட்டசபைத் தேர்தலில் இலவசங்களை மறுத்த மூதாட்டி

By Pothy Raj  |  First Published Feb 3, 2023, 5:16 PM IST

Meghalaya election: எங்களுக்கு எம்எல்ஏ-தான் தேவை, விற்பனையாளர் தேவையில்லை என்று மேகாலயா தேர்தலில்  இலவசப் பொருட்களை வேட்பாளரிடமே மூதாட்டி ஒருவர் திருப்பிக் கொடுத்த மூதாட்டி குறித்த ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.


Meghalaya election :எங்களுக்கு எம்எல்ஏ-தான் தேவை, விற்பனையாளர் தேவையில்லை என்று மேகாலயா தேர்தலில்  இலவசப் பொருட்களை வேட்பாளரிடமே மூதாட்டி ஒருவர் திருப்பிக் கொடுத்த மூதாட்டி குறித்த ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் வரும் 27ம் தேதி சட்டசபைத் தேர்தலும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியும், ஐக்கிய ஜனநாயக்க கட்சியும் போட்டியிடுகிறது.

Tap to resize

Latest Videos

இதில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மொந்திரோ ரஸ்பாங் என்ற வேட்பாளரும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி சார்பில் பால் லிங்டோவும் போட்டியிடுகிறார்கள்.

வெடித்த அதானி விவகாரம்: உடும்புபிடியில் எதிர்க்கட்சிகள்! நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

இதில் இரு வேட்பாளர்களும் தொகுதி மக்களுக்கு ஏராளமான இலவசப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வருகிறார்கள். மேற்கு ஷில்லாங் தொகுதியில் லும்பிடிங்கிரி நகரில் மகளிர் குழுவின் தலைவராக இருப்பவர் பியூரிட்டி புவா. இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கடந்த மாதம் 28 மற்றும் 30ம் தேதிகளில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி, தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வீட்டில் இலவசப் பொருட்களை கொடுத்துச் சென்றனர்.

பிரஷக் குக்கர், பாத்திரங்கள், சேலைகள், விலைஉயர்ந்த சமையல் பாத்திரங்களை இலவசங்களாகக் கொடுத்தனர். வெளியே சென்றுவிட்டுவந்த பியூரிட்டி புவா வீட்டில் ஏராளமான பொருட்கள் இருப்பது குறித்து மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு வேட்பாளர்கள் வந்து இலவசங்களை கொடுத்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, வேட்பாளர்களின் பிரதிநிதிகளை அழைத்த மூதாட்டி பியூரிட்டி புவா, “ எங்களுக்கு எம்எல்ஏ தான் வேண்டும், விற்பனையாளர் அல்ல ஆதலால் இலவசப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்

அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்

இது குறித்து பியூரிட்டி புவா நிருபர்களிடம் கூறுகையில் “ நான் இல்லாத நேரத்தில் வேட்பாளர்கள் என் வீட்டில் இலவசப் பொருட்களை கொடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனால், அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

வேட்பாளரின் ஏஜென்டுகளை அழைத்துக் கேட்டபோது, வேட்பாளர்கள் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்தனர். எம்எல்ஏவாக வேண்டுமென்றால், இதுபோன்று இலவசங்களை வழங்காதீர்கள், எம்எல்ஏவாக வர வேண்டுமா அல்லது விற்பனையாராக வேண்டுமா. என நான் அவர்களை எச்சரித்தேன்.இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் இலவசங்கள் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஷ்பாங், சமீபத்தில் ஆளும் என்பிபி கட்சியில் முதல்வர் சங்மாமுன்னிலையில் இணைந்தார். அவர் சமீபத்தில் மக்களுக்கு பிரஷர் குக்கர்களை இலவசமாக வழங்கினார். அது குறித்து கேட்டபோது மக்களுக்கு சொந்தபணத்தில் இலவசங்களை வழங்கவில்லை, எம்எல்ஏ நிதியில் இருந்துதான் வழங்கினேன் எனத் தெரிவித்தார்

click me!