உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி... மத்திய அரசு திட்டவட்டம்!!

Published : Feb 07, 2022, 09:19 PM IST
உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி... மத்திய அரசு திட்டவட்டம்!!

சுருக்கம்

தமிழகம் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகம் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்து அதற்காக ரூ 25 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து 2018 ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்தது. கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா, மேகதாது அணை கட்ட ஒத்துழைப்பு அளிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய பதில் கடிதத்தில் மேகதாது அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை குறிப்பிட்டு, மேகதாது அணை கட்டும் முடிவை கைவிடும்படி தெரிவித்திருந்தார். இதை மறுத்த கர்நாடகா மேகதாது அணை கட்டியே தீருவோம் என தெரிவித்திருந்தது. அதன்படி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இணை மந்திரி அஸிவினி குமார், மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும். மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!