உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி... மத்திய அரசு சூப்பர் தகவல்!!

By Narendran SFirst Published Mar 28, 2023, 5:53 PM IST
Highlights

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத்த அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத்த அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பினர். தற்போது வரை அங்கு போர் தொடர்ந்து வருவதால் அங்கு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உக்ரனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடரவும் அதனை இந்தியாவிலேயே நிறைவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் இதுத்தொடர்பாக பல பொதுநல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: ராகுல் காந்தி தகுதி நீக்கம்; இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளை உற்று நோக்கி கவனித்து வருகிறோம்: அமெரிக்கா!!

அதனை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அரசு மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியாவில் சேர்த்துக்கொள்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் ஏப்ரல் 1 முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்.. முழு விபரம் உள்ளே

இந்த தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்திய மருத்துவ பாடத்திட்டத்தின்படி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்தியாவில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோர் 2 ஆண்டுகள் கட்டாயம் மருத்துவ பயிற்சி பெற வேண்டும். செய்முறை வகுப்புகள் ஒரு சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதிவாய்ப்பு தரப்படும். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்படும். எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராமல் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!