கோரோனா நோயாளியை காப்பாற்ற போராடிய மருத்துவ ஊழியர்... விடுமுறை- சிகிச்சை அளிக்காததால் மரணம்..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2020, 5:38 PM IST
Highlights

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற சுகாதாரத்துறையினரும், மருத்துவ குழுவினரும் போராடி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற சுகாதாரத்துறையினரும், மருத்துவ குழுவினரும் போராடி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அவரை தொடர்ந்து பணியில் இருக்கும்படி வற்புறுத்தியதாகவும், அவருக்கு கொரோனா சோதனை கூட செய்யப்படவில்லை என்றும் அதனால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டதாகவும் மரணம் அடைந்தவரின் சக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

கடந்த 20ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் 24ஆம் தேதி வரை பணி செய்ததாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி மரணமடைந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தும் அவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்த மருத்துவ நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக ஊழியர்கள் கூறியுள்ளனர். மருத்துவ ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதா? என அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம். 

click me!