மாயாவதி எம்.பி. பதவி ராஜினாமா ஏற்பு...

First Published Jul 20, 2017, 2:12 PM IST
Highlights
Mayawathi Resignation Accepted


மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய மாயாவதியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கடந்த செய்வாய்க்கிழமை மாநிலங்களவையில் பேச போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

மக்களவையில் மாயாவதி, உத்தரபிரதேச மாநிலத்தில் தலித்துகள் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோதே மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் குறுக்கிட்டு, பேசுவதற்கு அளிக்கப்பட் 3 நிமிட அவகாசம்
முடிந்துவிட்டதை சுட்டிக்காட்டி, அடுத்த உறுப்பினரை பேசும்படி கேட்டுக் கொண்டார். 

இதனால், மாயாவதி, குரியனுடன் வாக்குவாதம் செய்தார். எனது சமூகம் மற்றும் தலித்துக்கள் சார்ந்த பிரச்சனை குறித்து பேசுவதை எப்படி நீங்கள் தடுப்பீர்கள். நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. அதனால் இன்னொரு உறுப்பினரை பேசும்படி உங்களால் அழைக்க
முடியாது என்று கூறினார்.

அதற்கு குரியன், உறுப்பினரால் கோரிக்கை மட்டுமே விடுக்க முடியும், அவையில் பேசி விவாதத்தை உறுப்பினர் தொடங்க முடியாது என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாயாவதி, தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க எனக்கு அனுமதியளிக்கப்படாதபோது இந்த அவையில் நான் இருப்பது சரியாக இருக்காது. எனவே எனது எம்.பி. பதவியை ராஜினாமா
செய்யப்போகிறேன் என்று வேகமாக அவையை விட்டு வெளியேறினார்.

மாயாவதி அன்று மாலை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மாயாவதியின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

click me!