ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... அவரது குடும்பத்துக்கு முதல்வர் கொடுத்த வாக்கு என்ன தெரியுமா?

By Narendran SFirst Published Jul 1, 2022, 12:14 AM IST
Highlights

ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். 

ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ராஜஸ்தானை சேர்ந்த டெய்லர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். உதய்பூரில் உள்ள டெய்லர் கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!

அந்த வீடியோவில் கொலை ஆயுதத்தை காட்டி மிரட்டியுள்ளனர். இதை அடுத்து ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமா பகுதியில் அவர்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் மேலும் மூவரை காவல்துரையினர் கைது செய்தனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... பாக். தீவிரவாதிகள் செயலா? உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

மேலும் அவர்களுக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கிய அவர், கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்னையா லாலின் மகன், தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எங்களுக்கு உறுதி அளித்தார். படுகொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இந்த 2 பேருக்கும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்யுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் படுகொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

click me!