கோவா தலைநகர் இடைத்தேர்தல் - மனோகர் பாரிக்கர் வேட்பு மனுத் தாக்கல்!!

 
Published : Aug 02, 2017, 03:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
கோவா தலைநகர் இடைத்தேர்தல் - மனோகர் பாரிக்கர் வேட்பு மனுத் தாக்கல்!!

சுருக்கம்

manohar parrikkar nominated for goa by election

கோவா தலைநகர் பானாஜி சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 23ந்தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கோவா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. இதையடுத்து, 2-ம் இடத்தில் இருந்த பா.ஜனதா கட்சி, சிறிய கட்சிகளான கோவா முன்னணி கட்சி, மஹாராஷ்டிராவாடி கோமந்த்க் கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் கடந்த மார்ச் 14-ந்தேதி ஆட்சி அமைத்தது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் அந்த பதவியை ராஜினாமா செய்து, கோவா முதல்வராக பதவி ஏற்று செயல்பட்டு வருகிறார்.

6மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்பதால், பானாஜிதொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ., சித்தார்த் குன்கோலினேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பானாஜி, வல்போய் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 23-ந்தேதி நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த ேதர்தலில் பானாஜிதொகுதியில் போட்டியிடும் முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் கடந்த 1994ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை போட்டியிட்டுதொடர்ந்து மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்தபின் முதல்வர் மனோகர் பாரிக்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

ஆகஸ்ட் 28-ந்தேதி தேர்தல் முடிவுகள் வந்தபின், பானாஜி தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிக்கான 365 நாளுக்கான ‘ரிவர்ஸ் கவுண்ட் டவுன்’ வரும் 29-ந்ேததிதொடங்கும். கட்டமைப்பு வசதிகள், சாலை, கல்வி, மின்சாரம், கழிவுநீர் வசதிகள், குப்பை அகற்றம் உள்ளிட்ட தொகுதி மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் இவ்வாவு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!