மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி

By SG Balan  |  First Published Jul 30, 2023, 4:56 PM IST

நாட்டின் புனிதமான மண்ணை கைகளில் ஏந்தி செல்ஃபி எடுத்து yuva.gov.in என்ற இணையதளத்தில் அப்லோட் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட 'என் மண் என் தேசம்' என்ற இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றிவரும் பிரதமர் மோடி இன்று 103வது முறையாக பேசினார். அப்போது, வரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது பற்றிச் சொல்லி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

“நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அமிர்த மகா மஹோத்சவத்தைக் கொண்டாடிக் வருகிறோம். அமிர்த மஹோத்சவத்தின்போது, நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும்" என்று கூறினார்.

பிரதமரின் YASASVI கல்வி உதவித் தொகை திட்டம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது என்ற பிரதமர் மோடி, "நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் 'என் மண் என் தேசம்' என்ற இயக்கம் தொடங்கும் என்றார். இதன்படி, தியாகிகளின் நினைவுகளைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தியாகிகளின் நினைவாக, லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டார்.

"நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள கிராமங்களில் இருந்து 7500 கலசங்களில் மண் எடுக்கப்பட்டு, அமிர்த கலச யாத்திரை தொடங்கி தலைநகர் டெல்லியை வந்தடையும். இந்த யாத்திரையில் எடுத்துவரப்பட்டும் மண்ணுடன் செடிகள், மரக்கன்றுகளும் கொண்டுவரப்படும். அவற்றைக் கொண்டு டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலேயே அமிர்த பூங்காவனம் உருவாக்கப்படும். இந்த அமிர்த பூங்காவனம், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற முழுக்கத்தின் மிக உன்னதமான அடையாளமாக இருக்கும்" என்றும் பிரதமர் சொல்லியிருக்கிறார்.

"அனைவரும் நாட்டின் புனிதமான மண்ணை கைகளில் ஏந்தி செல்ஃபி எடுத்து yuva.gov.in என்ற இணையதளத்தில் அப்லோட் செய்யுங்கள்" என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, சென்ற வருடம் சுதந்திர தினத்தில் வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவதில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்தது போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் தேசியக்கொடி பறக்கவேண்டும் என்று பேசி இருக்கிறார். இதை ஆண்டுதோறும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் விரும்பம் தெரிவித்துள்ளார்.

செமிகண்டக்டர் துறையில் விரைவான முன்னேற்றம்: ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!

மோடி தனது வானொலி உரையின் போது, ​​ஹஜ் கொள்கையில் அரசாங்கத்தின் சமீபத்திய மாற்றங்களை பாராட்டினார். இந்த புதுப்பிப்புகள் வருடாந்த யாத்திரையில் அதிகமானவர்கள் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை செய்ய முடிந்திருப்பது ஒரு பெரிய மாற்றம் என்று பிரதமர் மோடி கூறினார். ஹஜ் சென்று திரும்பிய முஸ்லீம் பெண்கள் தனக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார். இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்த சவுதி அரேபியா அரசுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

"கடந்த சில ஆண்டுகளில் ஹஜ் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் பாராட்டப்படுகின்றன. நமது முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் எனக்கு நிறைய எழுதியுள்ளனர். இப்போது அதிகமான மக்கள் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட பல கலைப்பொருட்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் - சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை ஏற்பு!

அப்போது பிரதமர் மோடி, யமுனை போன்ற பல ஆறுகள் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் மக்கள் அவதிப்பட வேண்டியிருந்தது. ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ​​கூட்டு முயற்சியாக ஒன்றிணைந்து செயற்படுவதன் பலத்தை நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்கள் தண்ணீரை சேமிக்கும் புதுமையான வழிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்ததைக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார்.

கேட்கும்போதே கண் கலங்குது.. 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! குப்பையோடு குப்பையாக வீசிய கொடூரன்!

click me!