தொடரும் போராட்டம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் மாநிலமே பதற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கடந்த மே 4 ஆம் தேதி மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்களில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலைசெய்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த அதிர்ச்சி.. மணிப்பூரில் துயர சம்பவம்.. உயிருடன் எரிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்தை விவாதிக்க வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியது.மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
இந்நிலையில் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டம் சனிக்கிழமை இரவு புதிய வன்முறை நடந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடையாளம் தெரியாத குற்றவாளிகள் சம்பவத்தின் பின்னணியில் இருந்தனர். இதன் போது டோர்பங் கிராமத்தில் ஒரு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது.
வன்முறையாளர்கள் பள்ளி கட்டிடத்தை தீப்பிடிக்க வைத்தனர். பள்ளி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை மீண்டும் உண்டாக்கி உள்ளது. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், வடகிழக்கு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவது குறித்து குடியரசுத் தலைவருடன் சமீபத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!