“கிடைத்தது கை மட்டும் தான்” உடல் கிடைக்காததால் பெற்ற மகளின் கைக்கு இறுதிச்சடங்கு - கேரளாவில் தொடரும் சோகம்

By Velmurugan s  |  First Published Aug 5, 2024, 3:11 PM IST

கேரளா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 380க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், வயநாட்டில் ஒருவர் தனது மகளின் கைக்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கேரளா மாநிலத்தில் கடந்த 29ம் தேதி பெய்த தொடர் கனமழையின் தாக்கத்தால் அட்டமலை, மேப்பாடி, சூரல் மலை ஆகிய பகுதிகள் காட்டாற்று வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. தற்போது வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக 380க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

முதல்வரின் வருகைக்காக காவலர் செய்த செயல்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - சென்னையில் பரபரப்பு

Tap to resize

Latest Videos

undefined

150க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பலரது உடல்கள் கை, கால், தலை உள்ளிட்ட பாகங்கள் இன்றி கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ராமசாமி என்ற நபர் தனது மகள் ஜிசாவை தேடி வந்துள்ளார். தனது மகள் தொடர்பான விவரங்களை ராமசாமி மீட்பு குழுவினரிடம் வழங்கி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பல நாட்களுக்கு பின்னர் மகளின் உடல் கிடைக்காத நிலையில், அவரது ஒற்றை கை மட்டும் கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு குழுவினர் ராமசாமியிடம் ஒப்படைத்து உள்ளனர். அந்த கையில் முருகன் என மருமகனின் பெயர் அச்சிடப்பட்ட மோதிரம் அணிந்திருந்ததை வைத்து கை அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த கையை ராமசாமி பெற்றுக் கொண்டார்.

ஆபாச படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு.. உஷார்! முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன அதிர்ச்சி தகவல்!

பின்னர், மகளின் கையை வெள்ளை துணியில் சுற்றி அந்த கைக்கு இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளார். மேலும் மாயமான தனது சக குடும்ப உறுப்பினர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் ராமசாமி இறுதிச்சடங்கில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!