KRK : விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுப்பார் போல..இது காத்துவாக்குல மூணு காதல்.!!

Published : May 03, 2022, 05:01 PM ISTUpdated : May 04, 2022, 10:31 AM IST
KRK : விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுப்பார் போல..இது காத்துவாக்குல மூணு காதல்.!!

சுருக்கம்

மத்திய பிரதேசத்தில் ஒரு நபர் மூன்று பெண்களுடன் 15 ஆண்டுகள் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்துவந்த நிலையில், மூவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா. இவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் மூன்று பெண்களை காதலித்து வந்துள்ளார்.‛ஓகே கண்மணி' படத்தில் காதலியுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்வது போல, கடந்த 15 ஆண்டுகளாக மூன்று பெண்களுடனும் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இதன்மூலமாக 6 குழந்தைகளும் பிறந்துள்ளது. 

ஆனால், பழங்குடியின முறைப்படி ஒருவர் திருமணம் செய்யவில்லை, எனில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்பதால், மூவரையும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார் சமர்த் மவுரியா. அதன்படி, கடந்த ஏப்ரல் 30ம் தேதி தனது ஆறு குழந்தைகள் முன்னிலையில் மூவரையும் திருமணம் செய்துள்ளார்.  இதுகுறித்து பேசிய மணமகன் மௌரியா, 'போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நான்.

2003இல் எனது முதல் தாரத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகமலே என்னுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். மௌரியா நான்பாய், மேளா மற்றும் சக்ரி ஆகிய மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட விழா, பழங்குடியினரின் முறைப்படி மூன்று நாட்கள் நடந்தது. காத்துவாக்குல ரெண்டு காதல் மாதிரி இது காத்துவாக்குல மூணு காதலா இருக்கே என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

இதையும் படிங்க : Bandh : மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ?

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!