‘மான் கி பாத் இல்லை’; ‘மோடி கி பாத்’ - மம்தா பானர்ஜி கடும் சாடல்

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
‘மான் கி பாத் இல்லை’; ‘மோடி கி பாத்’ - மம்தா பானர்ஜி கடும் சாடல்

சுருக்கம்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ மோடிஜி இந்திய பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் அழித்துவிட்டீர்கள்.  தவறான தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்தி வருகிறீர்கள். நாங்கள் உங்களை நம்பவில்லை. தொழில்நுட்பமும், வளர்ச்சியும் தேவைதான். இது போல் ரூபாய் நோட்டு மதிப்பிழத்தல் மூலம் வரும் தொந்தரவுகளை மக்கள் விரும்பவில்லை.

‘மனதோடு பேசுகிறேன்’(மான்கி பாத்) என்ற மோடியின் வானொலி நிகழ்ச்சி இப்போது ‘மோடியின் பேச்சு’(மோடி கி பாத்) என்று மாறிவிட்டது. அரசு இயந்திரத்தை மோடி தவறாகப் பயன்படுத்துகிறார். லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினைகளையும், வலிகளையும் தீர்ப்பதற்கு பதிலாக சுயவேதாந்தத்தைப் பேசி சுயவிளம்பரம் தேடுகிறார். இந்த நாட்டின் பெண்கள் உங்களுக்கு நிச்சயம்  பதிலடி கொடுப்பார்கள் ''  எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இனி 45 நாள் காத்திருக்க வேண்டாம்! புக் செய்ததும் இன்ஸ்டண்டாக டெலிவரியாகும் சமையல் கேஸ்.. HPCL அதிரடி
Shirdi Temple: சாய்பாபா தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களே கவனிக்கவும்.. ஜூலையிலிருந்து புதிய கட்டணம் அமல்!