டெல்லியில் சில சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்ட பெரிய தகராறில், அந்த கும்பலிடம் இருந்து தனது மகனைக் காப்பாற்ற முயன்ற 38 வயது நபர், நேற்று வெள்ளிக்கிழமை அன்று கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த அந்த நபரின் பெயர் முகமது ஹனிப் என்றும், அவர் போர்ட்டராக பணிபுரிந்து வந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நேற்று வெள்ளிக்கிழமை நடந்த அந்த மோதலில் இறந்த அந்த நபரின் இரண்டு மைனர் மகன்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணியளவில் இறந்த ஹனிப்பின் 14 வயது மகன் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை எடுக்க வெளியே சென்றுள்ளார். ஆனால் அதில் நான்கைந்து சிறுவர்கள் அமர்ந்து அவருக்கு வழிவிடாமல் மறித்து நின்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுவன் அவர்களை நகரச் சொல்ல, அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அது இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
வெளியில் சண்டை நடக்கும் சத்தம் கேட்ட ஹனிஃப் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வெளியே ஓடியுள்ளார். அப்போது அவர் தனது மகன், பல சிறுவர்களால் தாக்கப்படுவதைக் கண்டு உதவ முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்த சிறுவர்கள் அவரையும், செங்கற்களால் கொடூரமாக அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் கூட, சிறுவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளார். உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஆஹா ஸ்பெஷல் மசாஜா.. ஆசை ஆசையாய் சென்ற சென்னை ஐடி ஊழியர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?