பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகப் பேசியவரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஒரு கும்பல், அவரை 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளது.
கோவாவில் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகப் பேசினார் என்பதால் அவரை ஒரு கும்பல் நடுரோட்டில் மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.
வடக்கு கோவாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் கலங்குட் பகுதியில் கடை வைத்திருப்பவர் அப்பகுதிக்கு வந்த வெளிநாட்டுப் பயணி எடுத்த வீடியோவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்தக் கடை உரிமையாளரை ஒரு கும்பல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளது.
சாலை அனைவர் முன்பும் மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்தபின், 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கோவாவில் சென்ற வியாழக்கிழமை நடந்துள்ளது.
Juhu murder: தாயைக் கொன்று பள்ளத்தாக்கில் வீசிய மகன்! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!
The man who was supporting Pakistan in Goa pic.twitter.com/jE8IidAf9K
— Madhur Singh (@ThePlacardGuy)அண்மையில் இவரது கடைக்கு வந்த வெளிநாட்டுப் பயணி வீடியோ எடுத்தபடியே கடை உரிமையாளரிடம் பேசினார். இப்போது, கடையில் இருந்த டிவியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த பயணி கடை உரிமையாளரிடம், "நீங்கள் நியூசிலாந்தை ஆதரிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு கடை உரிமையாளர், "பாகிஸ்தானுக்கு" என்று பதில் அளிக்கிறார். உடனே அந்த வெளிநாட்டுப் பயணி ஏன் என்று கேட்கிறார். அதற்கு கடைக்காரர், "இது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி" என்று சொல்கிறார்.
இந்த வீடியோவின் தொடர்ச்சியாகவே வியாழக்கிழமையன்று ஒரு கும்பல் கடை உரிமையாளரை மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தி அதையும் வீடியோவாக வெளியிட்டது. இந்த வீடியோவில் ஒருவர், "இங்கு முஸ்லீம் பாதையோ அல்லது வேறு எந்தப் பாதையோ இல்லை. மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்காதீர்கள்" என்று சொல்கிறார்.
Chennai: சென்னையில் சிகரெட் வாங்கித் தர மறுத்த இளைஞர் படுகொலை
Muslims in Goa support the Pakistan team because they are living in a Muslim area!
What would be the fact check of Zubair to this?
He was saying that he supports “Khan Sahab” not “Pakistan”!
pic.twitter.com/dHSpZ2VcG8
பின்னர் பலர் சேர்ந்து கடை உரிமையாளர் மண்டியிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிய கடைக்காரர், பின்னர் அவர்கள் சொன்னபடி தரையில் மண்டியிட்டு காதுகளைப் பிடித்தபடி மன்னிப்பு கேட்பதை வீடியோவில் காணலாம். பின்னர் அந்த கும்பல் அவரை 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தை எழுப்ப வைக்கிறது.
இதுபற்றி அப்பகுதி காவல்துறையினரைத் தொடர்பு கொண்டபோது, இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறிவிட்டனர்.