
பிரதமர் மோடியின் முகத்தை “மார்பிங்” செய்து வாட்ஸ் அப்பில் குரூப்பில் பரப்பியதையடுத்து, அந்த குரூப்பின் அட்மின் எனச் சொல்லப்படும் நிர்வாகியையும், உறுப்பினரையும் போலீசார் செய்தனர்.
அவர்கள் இருவர் மீதும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் 2 நாட்களுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
உத்தரகன்னடா மாவட்டம், பட்கல் நகர் அருகே, டோடாபல்சே கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா நாயக்(வயது30) ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாட்ஸ்அப்பில் “தி பல்சே பாய்ஸ்” என்ற ஒரு குழு அமைத்து இருந்தனர்.
அந்த குழுவின் அட்மினாக கிருஷ்ணா நாயக் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த குரூப்பில் உள்ள கணேஷ் நாயக் எனும் உறுப்பினர் பிரதமர் மோடியின் முகத்தை மார்பிங் செய்த படத்தை கடந்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி குரூப்பில் அனுப்பி, பரப்பி விட்டார்.
இதைப் பார்த்த மற்றொரு வாட்ஸ் குரூப்பில் உள்ள ஆனந்த் நாயக் என்பவர், பிரதமர் மோடியின் முகத்தை இப்படி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, போலீசில் இதுகுறித்து ஏப்ரல் 15-ந்தேதி புகார்செய்தார்.
இதையடுத்து, தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66, 67ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து, பிரதமர் மோடியின் படத்தை அவதூறாக வெளியிட்ட கணேஷ் நாயக்கை போலீசார் கடந்த மாதம் 30-ந்தேதி கைது செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், குரூப்பில் இப்படி ஒரு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடிய படத்தை வெளியிட்டு, அதை தடுத்து நிறுத்தாத, கண்டனம் தெரிவிக்காத, அந்த உறுப்பினரை நீக்காமல் வைத்து இருந்த குரூப் அட்மின் கிருஷ்ணா நாயக்கை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பட்கல் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நாயக் கூறுகையில், “ இந்த படத்தை கணேஷ் நாயக் வெளியிட்டார் எனத் தெரிந்தவுடன் அவரை வாட்ஸ் குரூப்பில் இருந்து கிருஷ்ணா நாயக் நீக்கி இருக்க வேண்டும்.
ஆனால், அவரை வெளியேற்றாமல், அந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததால், கிருஷ்ணா நாயக் இருந்தார். ஒரு வாட்ஸ் குரூப்பில் உறுப்பினர் செய்யும் செயலுக்கு வாட்ஸ்அப் அட்மின்தான் பொறுப்பாகும்.
இதுபோன்ற கண்டிக்கத்தக்க படங்கள் வெளியாகும் போது அந்த உறுப்பினரை கண்டித்து, அவரை குரூப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், அதைச்செய்யாமல், ஆதரவு அளித்த கிருஷ்ணா நாயக்கை கைதுசெய்தோம். இருவரும் பார்டால் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி ஜாமீன் பெற்றனர்” எனத் தெரிவித்தார்.