Viral Video : பெற்ற தாய் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மகன்.. வைரல் வீடியோவில் சிக்கிய சம்பவம்

By Raghupati R  |  First Published Aug 8, 2023, 10:17 PM IST

பெற்ற தாய் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கடந்த திங்களன்று கவுஹாத்தியில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவர் தனது வயதான தாயைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த நபர் தனது தாயை சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் வெந்நீரையும் ஊற்றியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மகன் சமஜோதி பரலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஹெங்கராபரியில் அமைந்துள்ள மாவட்ட ஆணையர் அலுவலகம் அருகே இந்த மனிதாபிமானமற்ற செயல் நடந்துள்ளது. அந்த நபரின் அண்டை வீட்டாரால் குறிப்பிட்ட வீடியோ படம்பிடிக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான செயலின் பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. வைரலான வீடியோ காவல்துறைக்கு சென்றடைந்ததைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து திஸ்பூர் காவல் நிலையத்தின் ஒரு குழு குற்றம் சாட்டப்பட்டவரை ஹெங்க்ராபரி பகுதியில் இருந்து கைது செய்தனர். அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!