
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், ஒரு சில எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், வங்கிகளில் பணம் எடுப்பவரே மீண்டும், மீண்டும் வந்து வரிசையின் நிற்பதால் வங்கிகளில் பணத்தை மாற்றுபவர்களின் விரலில் கருப்பு மை வைக்கப்படும் என பொருளாதார செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில்,
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசின் இது போன்றதொரு அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட உள்ளதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.