
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து விவாதிக்க டெல்லி மாநில சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இது சரியான வழியல்ல என கண்டனம் தெரிவித்தார்.
எனவே, மத்திய அரசின் இந்த அறிவிபை திரும்பப் பெற குடியரசு தலைவர் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோடியின் இந்த அறிவிப்பு பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காகத்தான் என்றும், கள்ள நோட்டுக்களை மாற்றுவதற்காக அல்ல என்றும் கெஜ்ரிவால் மறைமுகமாக தாக்கியுள்ளார்.