விரைவில் நடைபெறவிருக்கின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே போட்டியை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் போகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சியின் தலைவர் வழிநடத்த வேண்டுமே தவிர, அவரே தேர்தலில் போட்டியிட்டால் கட்சியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குல்பர்கா தொகுதிக்கு கடந்த வாரம் விவாதிக்கப்பட்ட கர்நாடகத்திற்கான வேட்பாளர் பட்டியலில் கார்கே பெயரும் இடம்பெற்றது என்றும், ஆனால் அவர் தனது மருமகன் ராதாகிருஷ்ணனை பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்றும் சில தலைவர்கள் கூறினர். மல்லிகார்ஜுன கார்கே குல்பர்கா தொகுதியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் 2019 இல் தோல்வியடைந்தார். அவர் ராஜ்யசபாவில் இருந்து வருகிறார். அங்கு அவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். மேலவையில் அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல மல்லிகார்ஜுன கார்கே "ஒரு தொகுதியில் மட்டும் இருக்க விரும்பவில்லை. ஆனால் நாடு முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளதையும் நாம் பார்க்க வேண்டும். சமீப ஆண்டுகளில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜகவில் கூட, இந்த ஆண்டு அதன் தேசிய தலைவர் ஜே.பி நட்டா போட்டியிடவில்லை என்றாலும், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், அப்போதைய பாஜக முதல்வர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் அமித் ஷா ஆகியோர் லக்னோ மற்றும் காந்திநகரில் பெரும் வெற்றிகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக சந்தேகத்துக்கு இடமின்றி பிரதமர் மோடி நிறுத்தப்பட்டுள்ளார். எதிர் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்கேவின் இந்த முடிவு பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?