மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு மசோதா: சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பு

By SG Balan  |  First Published Feb 20, 2024, 9:00 AM IST

2018ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் ஆணைய அறிக்கைப்படி, மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. மாநில அரசு எடுத்த இந்த வமுடிவு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.


மகாராஷ்டிர அரசு இன்று நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் 50 சதவீத மேல் இடஒதுக்கீட்டை நீட்டித்து, மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதன் எதிரொலியாக அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, தனது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் மனோஜ். ஆனால், வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்.

Latest Videos

undefined

2018ஆம் ஆண்டில் அப்போதைய மாநில அரசு வழங்கியதைப் போலவே, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தியர்களுக்கு 10 முதல் 12 சதவிகித இடஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் மத்திய அரசின் பீமா யோஜனா காப்பீடு!

மராத்தா சமூகத்தின் பின்தங்கிய நிலை குறித்து மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (MSBCC) சமர்ப்பித்த அறிக்கை மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மாநிலத்தில் உள்ள குன்பி-மராத்தா மற்றும் மராத்தா-குன்பி சமூகத்தினர் எண்ணிக்கையை அடையாளம் காண, மகாராஷ்டிர அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்தும் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் தலைமையிலான ஆணையம் மராத்தா சமூகத்தின் பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், மராத்தியர்களுக்கு இடஒதுக்கீட்டை அரசு நீட்டித்தது. ஆனால், அது அரசியலமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கபட்ட 50 சதவீத வரம்பைத் தாண்டியதால், மாநில அரசு எடுத்த முடிவு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதிரி புதிரி சேல்ஸ்... எல்லாரும் தேடிப் போய் வாங்குற எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா!

click me!