பிப்ரவரி 15 வரை... பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை... அரசு எடுத்த அதிரடி முடிவு !!

By Raghupati R  |  First Published Jan 9, 2022, 5:38 AM IST

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 2,605,304 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 303,550,811 பேராக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று காரணமாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா உறூதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா பரவல் மோசமாக உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா பரவலின் மூன்றாம் அலை இன்னும் உச்சத்தை தொடாத நிலையில் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வருகிறது.  

சனிக்கிழமை மட்டும் அங்கு 20,318 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல மும்பையில் மட்டும் ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தினசரி ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்களை தாண்டும்போது அல்லது கொரோனா படுக்கைகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பினால் ஊரடங்கு குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத் துறை கூறியிருந்தது. அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக அங்கு சில கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,

பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேக்சின் போடப்பட்டவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வணிக வளாகங்கள், சந்தை வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். அவை இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

திருமணம் மற்றும் சமூக, மத, கலாசார அல்லது அரசியல் கூட்டங்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கும் இந்த 50% கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் இரவு மற்றும் காலை காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. சலூன்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய நிலையங்களை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!