Corona Lockdown : ஆட்டோ, டாக்ஸிகளுக்கு தடை... அரசின் அதிரடி லாக்டவுன் உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 7:09 PM IST
Highlights

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு 8 மணி முதல் பெங்களூரு நகரில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு 8 மணி முதல் பெங்களூரு நகரில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, உள்ளிட்ட 27 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதை அடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத்தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதேபோல் பெங்களூருவிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதே வேகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் இன்று இரவு 8 மணி முதல் பெங்களூரு நகரில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்று பரவல் அதிகரிப்பால் பெங்களூருவில் இன்று இரவு 8 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சலூன், அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், மால்கள் திறக்க அனுமதி இல்லை. உள் அரங்குகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் 100 பேரும், திறந்த வெளியில் நடக்கும் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நகர பேருந்து சேவை, ஆட்டோ, வாடகை கார் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை ஓரு சில மாற்றங்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவச பொருட்கள் விற்பனை, பழம், காய்கறி, பால், மருந்தகம், ஆஸ்பத்திரி,, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்ககம் போல் இயங்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மது விற்பனை செய்வது குறித்து இன்று மாலை அரசு முக்கிய முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

click me!