மகாராஷ்டிராவில் சித்தப்பாவான அத்தை... 4 நாட்களில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார்..!

Published : Nov 26, 2019, 03:07 PM ISTUpdated : Nov 26, 2019, 03:13 PM IST
மகாராஷ்டிராவில் சித்தப்பாவான அத்தை... 4 நாட்களில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார்..!

சுருக்கம்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக பதவியேற்ற 4 நாட்களில் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக பதவியேற்ற 4 நாட்களில் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. பாஜகவுடனான உறவை முறித்த சிவசேனா, எதிர் அணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வந்தனர்.  ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன், சனிக்கிழமை அதிகாலையில் ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இதனை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை 5 மணிக்கும் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ்க்கு உத்தரவிட்டது. இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். எவ்வித ரகசியமும் இருக்க கூடாது என உத்தரவில் தெரிவித்தது. 

இதனிடையே, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில்,  துணை முதல்வராக பதவியேற்ற 4 நாட்களில் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பெருபான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிஸிம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 3.30 மணி மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதேபோல் அவசர அவசரமாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா பெருபான்மை இல்லாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!