ஆளுநர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியும்... பாஜகவுக்கு ரவுண்டு கட்டி ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Nov 26, 2019, 11:43 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் ஆளுநர் மற்றும் பாஜகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உடனே நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஆளுநர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளுநர் மற்றும் பாஜகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உடனே நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஆளுநர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. பாஜகவுடனான உறவை முறித்த சிவசேனா, எதிர் அணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டதை அடைந்தது. 

 

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன், சனிக்கிழமை அதிகாலையில் ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, குதிரை பேரம் நடப்பதை தவிர்க்கும் வகையில் உடனடியாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


 
இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாகவும், அதை மாற்றி இன்றோ நாளையோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் பட்னவிஸ் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நாளை எம்.எல்.ஏ.க்கள் காலை முதல் மாலைக்குள் பதவியேற்று கொள்ள வேண்டும். இதற்கென இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும். இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். எவ்வித ரகசியமும் இருக்க கூடாது என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சிவசேனா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கபில் சிபில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும்வரை, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எந்தவிதமான முக்கியமான கொள்கை முடிவுகளையும் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

click me!