ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நுழைந்த கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 661ஆக உயர்வு.!

Published : Apr 05, 2020, 03:41 PM IST
ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நுழைந்த கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 661ஆக உயர்வு.!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில்  மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 661ஆக உயர்ந்துள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர்.  52 பேர் கொரோனா வைரஸலிருந்து மீண்டுள்ளார்கள் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

மகாராஷ்ராவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. இதுவரை உலக முழுவதும் 64,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11, 34000ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 635 ஆக இருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில்  மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 661ஆக உயர்ந்துள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர்.  52 பேர் கொரோனா வைரஸலிருந்து மீண்டுள்ளார்கள் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்