இந்தியாவில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

Published : Apr 05, 2020, 02:28 PM ISTUpdated : Apr 05, 2020, 02:31 PM IST
இந்தியாவில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மாநில வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம்.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவாத நிலையிலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டுவருகிறது. ஆனாலும் கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

கொரோனா நோயாளிகளை சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணிகளையும் சுகாதாரத்துறை எடுத்துவருகிறது. 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 3700ஐ கடந்துவிட்டது. கொரோனாவிற்கு 77 பேர் பலியாகியுள்ள நிலையில், 267 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விவரங்களை பார்ப்போம்.

மகாராஷ்டிரா - 661 

தமிழ்நாடு - 485 

டெல்லி - 447

கேரளா -  306

ராஜஸ்தான் - 210

தெலுங்கானா - 272

உத்தர பிரதேசம் - 242

ஆந்திரா - 226

கர்நாடகா - 146

மத்திய பிரதேசம் - 167

ஜம்மு காஷ்மீர் - 92

ஹரியானா - 74

அசாம் - 25

மேற்கு வங்கம் - 54

கோவா- 7

உத்தரகண்ட் - 22

பீஹார் - 32

புதுச்சேரி - 6 

ஹிமாச்சல பிரதேசம் - 4.
 

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?