முதல் ஆளாக சிகப்பு சுழல் விளக்கை நீக்கிய மஹாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்

 
Published : Apr 19, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
முதல் ஆளாக சிகப்பு சுழல் விளக்கை நீக்கிய மஹாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்

சுருக்கம்

Maharashtra Chief Minister Devendra removing red spiral bulb is the first person patnavis

பிரதமர் உள்ளிட்ட விஐபிகள் யாரும்  சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது காரில் இருக்கும் சிகப்புநிற சுழல் விளக்கை மஹாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நீக்கி உள்ளார்.

இது மக்களுக்கான அரசு வி.ஜ.பி.களுக்காக அல்ல என்று கூறி பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் யாரும் இனி சிகப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்கை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மே 1 ஆம் தேதி முதல் இப்புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகவும், அதே நேரத்தில் காவல்துறை,தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் சுழல் விளக்கை  பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மஹாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது காரில் இருக்கும் சுழல் விளக்கை நீக்கி அனைவரையும் புருவம் உயரச் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!