
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் நேற்று திடீரென பூமிக்கு அடியில் எழுந்த வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்படுகிறதோ என அஞ்சி மக்கள் அலறியடித்து ஓடினர்.
ஆனால், புவிவியல் மையத்தின் தகவலின்படி, எந்தவிதமான நிலநடுக்கமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கேள்வியும் கேட்கல! வர்றதும் இல்லை! எம்பி-யானபின் மவுனமாகிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
பிடிஐ செய்திக்கு லத்தூர் நகரவாசி ஒருவர் கூறுகையில் “ லத்தூரில் உள்ள விவேகானந்தா சவுக் பகுதியில் நேற்று காலை 10.30 மணி முதல் 10.45 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டது. பூமிக்கு அடியில் சத்தமும், உருளும் சத்தமும் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். பூகம்பம் ஏற்படுகிறதா என அஞ்சி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர்” எனத் தெரிவித்தனர்
பூமிக்கு அடியில் எழுந்த திடீர் வித்தியாசமான சத்தத்தைக் கேட்டபின் மக்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளி்த்தனர். இதையடுத்து, அங்கு வந்த புவிவியல் மைய அதிகாரிகள் மக்களிடம் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்துச் சென்றனர்.
ஆனால், அதிகாரிகள் கூற்றுப்படி “ மக்கள் கூறும் காலை 10.30 மணி முதல் 10.45 மணிவரை பூமிக்கு அடியில் எந்தவிதமான சத்தமோ, நிலத்தட்டுகள் நகர்வோ, நிலஅதிர்வோ ஏதும் ஏற்படவில்லை. புவிவியியல் கண்காணிப்பு மைய கருவிகளிலும் எந்த சமிக்கையும் பதிவாகவில்லை.” எனத் தெரிவித்தனர்.
பேரிடர் மேலாண்மை அதிகாரி சகேப் உஸ்மானி கூறுகையில் “ மாரத்வாடா மண்டலத்தில் அடிக்கடி பூமிக்கு அடியில் வித்தியாசமான சத்தங்கள் அவ்வப்போது எழுகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில் நிலங்கா பகுதியில் உள்ள நித்தூர்-தாங்கேவாடி பகுதியில் இதேபோன்று பூமிக்கு அடியில் வித்தியாசமான சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹசோரி, கிலாரி, பகுதியில் 3 முறை இதேபோன்று சத்தம் கேட்டது” எனத் தெரிவித்தார்.
பிபிசி டெல்லி, மும்பை அலுவலகங்களில் 3வது நாளாக ஐடி சர்வே தொடர்கிறது
கடந்த 1993ம் ஆண்டு லத்தூர் மாவட்டம் கிலாரி கிராமத்தை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.