ஒரு விஐபி மரத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ 12 லட்சம் செலவு செய்யும் அரசு!

By SG Balan  |  First Published Dec 16, 2024, 8:01 PM IST

சாஞ்சியில் உள்ள ஒரு அரச மரத்திற்கு மத்தியப் பிரதேச அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவிடுகிறது. இந்த மரம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்துக்கு இணையாகப் மதிக்கப்படுகிறது. இதற்கு 24 மணி நேரமும் காவல் போடப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் பிரபல பௌத்த தலமான சாஞ்சிக்கு அருகில் உள்ள சல்மத்பூரில் வேறு எங்கும் இல்லாத ஒரு அதிசய மரம் உள்ளது. அந்த மரத்தை பராமரிக்க மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவாகிறது.

இந்த அரச மரத்தை உள்ளூர்வாசிகள் இந்தியாவின் முதல் விஐபி மரம் என்று அழைக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் மரத்தின் பாதுகாப்புக்காக 4 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஒரு இலை கூட காய்ந்துவிடாமல் இருப்பதை உள்ளூர் அதிகாரிகள் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் அந்த மரம் எப்போதும் அழகிய நிலையில் காட்சி அளிக்கிறது.

அம்பானி, அதானி மீது இடியை இறக்கிய ப்ளூம்பெர்க்! எலைட் லிஸ்டில் இடம் கிடையாது!

undefined

2012ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தங்கள் நாட்டிலிருந்து கொண்டுவந்த மரக்கன்று இந்த இடத்தில் நடப்பட்டது. இந்த அரச மரம் கௌதம புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படும் போதி மரத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

மரம் அமைந்துள்ள குன்று சாஞ்சி புத்த பல்கலைக்கழகத்தின் கட்டிப்பாட்டில் உள்ளது. இந்த முழுப் பகுதியும் பௌத்தம் பரவியுள்ளது. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்த மரம் இங்கு நடப்பட்டுள்ளது.

புத்தர் புத்த கயாவில் உள்ள இதேபோன்ற மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்போதுதான் ஞானம் பெற்றார். அந்த மரம் பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்ராவால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டது. இதே மரத்தின் ஒரு பகுதி சாஞ்சி பௌத்த பல்கலைக்கழகத்திலும் நடப்பட்டுள்ளது.

மரம் 15 அடி உயர இரும்பு வேலிக்குள் இருக்கிறது. "இந்த புனித மரம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதற்கு பண்டிகைகள் காலத்திலும் விடுமுறை இல்லை" என்று மரத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவலர் ஒருவர் கூறியுள்ளார்.

மரத்தை பாதுகாக்கும் பணிக்காக ஒரு காவலாளிக்கு மாதம் ரூ.26,000 சம்பளம் வழங்கப்படுகிறதாம். நான்கு பேர் மரத்தின் பாதுகாப்புக்காக பணியில் இருப்பதால் மாதம் தோறும் மரத்துக்கான பாதுகாப்புச் செலவு ரூ.1,04,000. ஒரு ஆண்டு முழுவதும், இந்த மரத்தைப் பராமரிக்கவும் காவல் காக்கவும் மத்தியப் பிரதேச அரசு ரூ.12.48 லட்சம் செலவிடுகிறது.

இது தவிர இந்த விஜபி மரத்துக்கு நீர் பாய்ச்ச, சாஞ்சி நகராட்சி தனி தண்ணீர் டேங்கர் ஏற்பாடு செய்துள்ளது. வேளாண்மைத் துறை அலுவலர்கள் வாரந்தோறும் இங்கு வந்து மரத்தை நோய் தாக்காமல் இருக்கிறதா என்று பரிசோதித்து வருகின்றனர். இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நடக்கிறது.

புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா! எத்தனை பேருக்கு தெரியும்?

click me!