வாக்குறுதிகளை நிறைவேற்ற மீண்டும் கடன் வாங்கும் ம.பி. பாஜக அரசு!

Published : Dec 24, 2023, 11:44 AM IST
வாக்குறுதிகளை நிறைவேற்ற மீண்டும் கடன் வாங்கும் ம.பி. பாஜக அரசு!

சுருக்கம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியப்பிரதேச பாஜக அரசு மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்று  ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏற்கனவே கடன்  சுமையில் இருக்கும் அம்மாநில அரசு மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

மத்தியப்பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள் மாநிலத்தின் செலவினங்களைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.2,000 கோடியை கடனாக அவர் கோரியுள்ளார். ஆளும் பாஜக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடினமான பணியில் இறங்கியுள்ள நிலையில், மாநில அரசின் மோசமான நிதிநிலையை சமீபத்திய அறிகுறி இது என சுட்டிக்காட்டுகிறார்கள்.

முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங்கிடம் இருந்து அரியணையை பெற்று மோகன் யாதவ் அலங்கரித்தபோது அம்மாநிலத்துக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி கடனாக இருந்தது. லாட்லி பெஹ்னா போன்ற சிவராஜ் சிங் சவுகானின் நலத்திட்டங்கள் நெருக்கமான போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டதை தாண்டி, பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தாலும், அதிக செலவினத்திலேயே இந்த வெற்றி அக்கட்சிக்கு கிட்டியுள்ளது.

முந்தைய சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் 2023 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.44,000 கோடி கடன் வாங்கியது. இதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பெற்ற ரூ.5000 கோடியும் அடங்கும். இப்போது புதிய அரசு அமைந்துவிட்ட நிலையில், அம்மாநில கஜானா காலியாகி விட்டது. நீண்ட பட்டியலை கொண்ட பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன செய்வதென அக்கட்சி விழியை பிதுக்கிக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால், நெருக்கடி எதுவும் இல்லை என்றும், நிதிப் பற்றாக்குறையால் எந்த நலத் திட்டமும் நிறுத்தப்படாது என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் மோகன் யாதவ் உறுதியளித்துள்ளார். “திட்டங்கள் நிறுத்தப்படும் என்று சிலர் பிரச்சனைகளை எழுப்பியுள்ளனர். இது தேவையற்ற பயம். லட்லி லக்ஷ்மி யோஜனா உட்பட எந்த திட்டமும் நிறுத்தப்படாது” என அவர் கூறியுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை ராமாயணம் மற்றும் கீதை போன்றது என்றும், முந்தைய அரசின் அனைத்து திட்டங்களும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!

ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இதில் நம்பிக்கை இல்லை. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் கூறுகையில், மத்திய பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“மத்தியப் பிரதேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இப்போது ரூ.40,000 கடனில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தை பாஜக தொடர்ந்து திவாலாக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. அவர்களுக்கு எப்போது இது புரியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறிய முயற்சித்திருக்கும் என்றும் அப்பாஸ் ஹபீஸ் கூறியுள்ளார்.

கடன் தொடர்பாக அரசாங்கத்தை குறிவைப்பதற்கு பதிலாக காங்கிரஸ் தனது தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்யலாம் என துணை முதலமைச்சர் ஜெகதீஷ் தேவ்டா பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!