Bansidhar Tobacco Private Limited : கான்பூரில் உள்ள ஒரு புகையிலை நிறுவன வளாகத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள அந்த நிறுவன உரிமையாளரின் வீட்டில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கார், மெக்லாரன், லம்போர்கினி மற்றும் ஃபெராரி உள்ளிட்ட 60 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல சொகுசு கார்களும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நபருக்கு சொந்தமான அந்த புகையிலை நிறுவனம் கான்பூரில் உள்ளது.
கான்பூரில் உள்ள "பன்சிதர் டொபாக்கோ பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில், 15 முதல் 20 குழுக்கள் குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அந்த புகையிலை நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்களின் வளாகங்களில் இதேபோன்ற சோதனைகளை மேற்கொண்டனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே.. மர்ம பொருள் வெடித்ததில் 4 பேர் காயம் - என்ன நடந்தது?
மற்ற நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்யும் இந்த புகையிலை நிறுவனம், வரி மற்றும் ஜிஎஸ்டியை பெரிய அளவில் தாக்கல் செய்யாமல் ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. தொழிலதிபர் கேகே மிஸ்ரா என்ற முன்னா மிஸ்ராவின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த நிறுவனம் 20 முதல் 25 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், உண்மையில் அந்த சுமார் 100-150 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. வருமான வரிக் குழு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில் அதன் உரிமையாளரின் சொத்துக்கள் மற்றும் வருமானம், பல முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினிகளுடன் பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமையும், அந்த நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகின்றது.