பெங்களூருவில் பயங்கரம்.. உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு.. 9 பேருக்கு காயம் - முதல்வர் அளித்த விளக்கம்!

Ansgar R |  
Published : Mar 01, 2024, 02:38 PM ISTUpdated : Mar 01, 2024, 08:39 PM IST
பெங்களூருவில் பயங்கரம்.. உணவகத்தில் வெடித்த வெடிகுண்டு.. 9 பேருக்கு காயம் - முதல்வர் அளித்த விளக்கம்!

சுருக்கம்

Bengaluru Blast : பெங்களூரு ராஜாஜி நகரில் பிரபல பிரபலமான உணவு விடுதி ஒன்றில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு ராஜாஜி நகர் அருகே உள்ள மிகவும் பிரபலமான ஒரு உணவு விடுதி தான் "ராமேஸ்வரம் கஃபே".  வழக்கம்போல மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாகவும், இதில் 9 பேர் காயமடிந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் இப்பொது கிடைத்துள்ளது.

ராமேசுவரம் ஓட்டலில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் முன்பு தெரிவித்திருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ), வெடிகுண்டு படை மற்றும் தடயவியல் ஆய்வகம் ஆகியவற்றின் குழு அந்த ஓட்டலுக்கு வந்த பிறகு, முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓட்டலில் தாக்குதலுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவி (ஐஇடி) பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.

Indian Stock Market: BSE மற்றும் NSE சிறப்பு வர்த்தகம் நாளை நடைபெறுகிறது; காரணம் இதுதான்!!

"இன்று மார்ச் 1ம் தேதி மதியம் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் ஒரு பை இருந்தது, இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்.

"ராமேஸ்வரம் கஃபே நிறுவனர் ஸ்ரீ நாகராஜிடம் தனது உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு பற்றிப் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையினால் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்றும், மேலும் சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை என்றும் அவர் எனக்குத் தெரிவித்தார். அவர்களது ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். வெடிகுண்டு வெடிப்பு பற்றிய தெளிவான வழக்கு, பெங்களூரு முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து தெளிவான பதில்களைக் கோருகிறது" என்று பாஜக பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா கூறினார்.

காயமடைந்த அந்த ஒன்பது பேர் புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கர்நாடக காவல்துறை தலைவர் அலோக் மோகன் தெரிவித்தார்.

பாஜக போடும் ஸ்கெட்ச்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; பிரதமர் மோடி மீண்டும் வாரனாசியில் போட்டி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்