ரூ.538 கோடி வங்கி மோசடி செய்து சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வாழ்வதைவிட சாவதே மேல் என்று கருதுவதாக நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டிருக்கிறார்.
கனரா வங்கி பணமோசடி வழக்கில் கைதான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் (74), வாழ்க்கையில் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நரேஷ் கோயல், சிறையில் அடைபட்டு உயிருடன் இருப்பதை விட சாவதே மேல் என்று நீதிபதியின் முன் கண்ணீர் விட்டுக் கதறினார். அவரது முறையீட்டைக் கேட்ட சிறப்பு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே, சிறையில் அவரது உடல் மற்றும் மன நலனுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நீதிமன்றத்தில் கும்பிடு போட்டு குனிந்தபடி கெஞ்சிய நரேஷ் கோயல், தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியைக் காணவேவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு
இதற்கு நீதிபதி "அவரது (அனிதா கோயல்) உடல்நிலை சரியில்லாத நிலையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நீதிமன்றம் உறுதி அளித்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்! முதல் நாளிலேயே இலக்கை எட்டிய சென்னை முதலீட்டாளர் மாநாடு!
நரேஷ் கோயல், அவரது மனைவி மனைவி அனிதா கோயல் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தன்னை நீதிபதி முன் ஆஜர்படுத்துமாறு நரேஷ் கோயல் கோரியதை அடுத்து சனிக்கிழமையன்று, அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். முழு உடலும் நடுங்க அவர் நீதிமன்றத்திற்கு வந்தார். முழங்கால் வீக்கம் காரணமாக இரண்டு கால்களையும் மடக்க முடியவில்லை என்றும் சிறுநீர் கழிப்பதற்காக அடிக்கடி கழிப்பறைக்கு விரைந்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் நரேஷ் கூறினார். சில நேரங்களில் சிறுநீருடன் இரத்தம் வருவதாகவும் முறையிட்டார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு எப்பொழுதும் நோயாளிகள் நீண்ட வரிசையில் இருப்பார்கள் என்றும் அதனால் சரியான நேரத்தில் அவர் மருத்துவரைப் பார்க்க முடியாது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்ச்சிக்கு முழு போதையில் வந்து அசிங்கமாகப் பேசிய எலான் மஸ்க்!