மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 9க்குப் பின் வெளியீடு? இறுதிகட்ட ஆய்வில் தேர்தல் அதிகாரிகள்!

By SG Balan  |  First Published Feb 20, 2024, 10:35 AM IST

பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயணங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், 2024 தேர்தல் அட்டவணை 2019ஆம் ஆண்டைப் போலவே இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.


இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு அதிகாரிகள் இறுதிச் சோதனைக்காக மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 9ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயணங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், 2024 தேர்தல் அட்டவணை 2019ஆம் ஆண்டைப் போலவே இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Latest Videos

undefined

மக்களவைத் தேர்தலுடன் ஒருசில மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கான தயாரிப்புகளை தேர்தல் ஆணைம் மேற்கொண்டுள்ளது. இதற்காக தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு அந்த மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்துவருகிறது.

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு மசோதா: சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்பாக, இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மார்ச் 8-9 தேதிகளில் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை மற்றும் படைகளின் இருப்பு குறித்து கேட்க உள்ளனர்.

அவர்கள் மார்ச் 12-13 தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் சென்று, மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியுமா என்று நிலைமையை மதிப்பீடு செய்ய உள்ளனர். படைகளின் இருப்பைப் பொறுத்தது தேர்தலை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தல் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

டெல்லியில் 80% பேர் போதையில் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல்! கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!

click me!