யார் யார் ஆட்சியில் மல்லையாவுக்கு எவ்வளவு கடன் கொடுக்கபட்டது? - முழு விவரம் இதோ...

 
Published : Mar 17, 2017, 05:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
யார் யார் ஆட்சியில் மல்லையாவுக்கு எவ்வளவு கடன் கொடுக்கபட்டது? - முழு விவரம் இதோ...

சுருக்கம்

loans given to mallaya

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ரூ. 8,040 கோடி கடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டது, ஆனால், அவர் மீதான நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுக்கிறது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கெங்வார் தெரிவித்தார்.

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழும் விஜய் மல்லையா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மக்கள் அவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிதித்துறை இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் பதில் அளித்தார். அவர் பேசியதாவது-

9 ஆயிரம்  பேர்

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், கடனை கட்டாதவர்கள் மட்டும் 9 ஆயிரத்த 130 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ரூ. 91 ஆயிரத்து 155 கோடி பல்வேறு அரசு வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

(மல்லையா பெயரைக் குறிப்பிடாமல்) ஒரு நபரின் பெயர் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர் பட்டியலில் 2004ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது, அது மீண்டும் 2008ம் ஆண்டு பிப்ரவரியில் மறு ஆய்வு செய்யப்பட்டது. ஏறக்குறைய அந்த நபர் ரூ. 8 ஆயிரத்து 40 கோடி கடன் பெற்றுள்ளார். அவை அனைத்தும் வாராக் கடனாக இருக்கிறன. 2010ம் ஆண்டு அந்த கடன்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் முடக்கம்

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு அரசு அமைப்புகள் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கையை ஏற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. நீதித்துறை முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காங். கொடுத்தது

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு  கடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டது, ஆனால், அவர் மீதான நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுக்கிறது.

வங்கியில் கடன்

அரசு வங்கியில் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் 9,150 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 8,364 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வங்கிகளிடம் ரூ. 85 ஆயிரத்து 258 கோடி கடன் பெற்றுள்ளனர். 2024 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்கள், ரூ.29 ஆயிரத்து 557 கோடி கடன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்