முதல் முறையாக.. நேரலையில் நீதிமன்ற விசாரணை கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி......

By Asianet TamilFirst Published Feb 13, 2020, 5:43 PM IST
Highlights

நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் முதல் முறையாக  அனுமதி அளித்துள்ளது.

சாமானிய மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளை (விசாரணைகள்) நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. மேலும் நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவதால் நீதிமன்றத்தின் வெளிப்படைதன்மையை மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், முதல் முறையாக கல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப செய்ய அனுமதி அளித்துள்ளது. பார்சி அல்லாதவர்களை மணந்த பார்சி ஜோராஸ்ட்ரிய பெண்களின் குழந்தைகளை அடாஷ் அதாரனுக்கு (நெருப்பு கோயில்) அணுக அனுமதிக்கலாமா என்பது குறித்த வழக்கின் இறுதி விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப கல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

யூ டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக நீதிமன்ற அறையில் 2 சிறப்பு கேமராக்கள் மற்றும் இதர கருவிகள் பொருத்தப்படும். இதற்கான செலவினங்களை பார்சி ஜோராஸ்ட்ரிய சங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கல்கத்தா உயர் நீதிமன்றம் தற்போதைய அனுமதி, வருங்காலங்களில் முக்கிய வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

click me!