இந்தியா வந்தது கொடூர கொரோனா..! தீவிர சிகிச்சையில் மூவர்..!

By Manikandan S R SFirst Published Feb 13, 2020, 3:38 PM IST
Highlights

தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 1,357 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 242 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து இந்தியா வந்த அவர்களை கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததுள்ளது. முன்னதாக இந்தியாவில் முதலில் கேரளாவில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என கண்டறியப்பட்டு இதுவரையில் தீவிர கண்காணிப்பில் 16,067 பேர் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 45,207 அந்நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!

click me!