சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது !! ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கேரளாவில் புரட்சி வெடிக்கும் ….காங்கிரஸ் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Oct 5, 2018, 7:58 AM IST
Highlights

சபரிமலை விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததுபோல் கேரளாவிலும் போராட்டம் வெடிக்கும் என அம்மாநிலக் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சுதாகரன் எச்சரித்துள்ளார்.

'10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர முடியாது' என்ற தடை உத்தரவை நீக்கி, 'அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' எனச் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தேசம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் எதிர்ப்பும் ஆதரவும் என கேரளா மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும்  இரண்டுபட்டுக் கிடக்கிறது. தீர்ப்பை அமல்படுத்த ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இநித தீர்ப்பை எதிர்த்து ரீண்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள அரசும். தேவசம்போர்டும் அறிவித்துள்ளது.

 

இந்தி தீர்ப்புக்கு. காங்கிரஸின் சில தலைவர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவோ, ``இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலாகக் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரான கே.சுதாகரன்  கேரளாவில் பிரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கேரளா அரசு இந்த விவகாரத்தில் அறிவுப்பூர்வமாக  சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். நூற்றாண்டுகளுக்கு மேல் பின்பற்றப்படும் வழக்கம் இது. மக்களின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம். ஐயப்பன் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் கண்டிப்பாகச் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என தெரிவித்தார்.

 

ஜல்லிக்கட்டு விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டியது. கடைசியில் என்ன நடந்தது ?. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கைமீறி போனதுடன் போராட்டம் வெடித்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

 

அதுபோல் சபரிமலை விஷயத்திலும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த நினைத்தால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல் கேரளாவிலும் போராட்டம் வெடிக்கும். நிலைமை கைமீறிப்போகும். எல்லாம் தெரிந்துதான் அரசாங்கம் மறுசீராய்வு செய்யப்போகிறதா?" எனக் எச்சரித்துள்ளார்.

click me!