மோடி ஆட்சி செய்த இடத்தில் புகுந்த சிறுத்தை!! அதிர்ச்சியில் எம்எல்ஏக்கள்

Published : Nov 05, 2018, 01:54 PM IST
மோடி ஆட்சி செய்த இடத்தில் புகுந்த சிறுத்தை!! அதிர்ச்சியில் எம்எல்ஏக்கள்

சுருக்கம்

பிரதமர் மோடி 3 முறை முதல்வராக இருந்த குஜராத் மாநிலத் தலைமைச் செயலக வளாகத்தில் ஒரு சிறுத்தை புகுந்தது. அதை பார்த்ததும், அங்கிருந்த சிஆர்பிஎப் வீர்ர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குஜராத்தில் தலைநகர் காந்தி நகரில் அமைந்துள்ள தலைமை செயலகத்தை சுற்றி வனப்பகுதியாக உள்ளது. இதையொட்டி அங்கு தினமும் பல்வேறு விலங்குகள் உலாவருவது வழக்கமாக இருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலையில், தலைமை செயலக வளாகத்தில் சிஆர்பிஎப் வீர்ர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள இரும்பு வேலியின் கீழ் பூனை போன்ற உருவம் வந்ததை பார்த்தனர். 

அதன் அருகில் செல்ல முயன்றபோது, அது சிறுத்தை என தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வீர்ர்கள், அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இதபற்றி மற்ற வீர்ர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தை தலைமை செயலக வளாகத்தில் உலா வருவது பதிவாகி இருந்தது. இதைதொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலக வளாகத்துக்குள் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அங்குள்ளவர்களுக்கு பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இப்ப பிரியங்கா காந்தி பிரதமரா இருந்தா நடக்குறதே வேற.. காங். கட்சிக்குள் குண்டு வீசிய மூத்த எம்.பி.!
20 ஆண்டுகளுக்கு பின் கை கோர்த்த தாக்கரே சகோதரர்கள்.. மகாராஷ்டிராவில் பரபரக்கும் அரசியல் களம்