இதுலேயுமா சீனா புராடக்ட்! யூஸ் பண்ணா கண்டிப்பா ப்ராப்ளம் இருக்கு!

 
Published : Oct 31, 2017, 05:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இதுலேயுமா சீனா புராடக்ட்! யூஸ் பண்ணா கண்டிப்பா ப்ராப்ளம் இருக்கு!

சுருக்கம்

LED bulbs are fake

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எல்.இ.டி. பல்புகளில் 4-ல் 3 பங்கு பல்புகள் போலியானது என்றும் ஆபத்தானது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களான மும்பை, ஐதராபாத், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகளில் நீல்சன் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 

இந்த ஆய்வின்போது, விற்பனை செய்யப்படும் எல்.இ.டி. பல்புகள் போலியானவை மட்டுமல்லாது, ஆபத்தானதும் என்பதும் தெரியவந்துள்ளது.

சீனப் பொருட்களை இறக்குமதி செய்து, அதனை உள்ளூர் தயாரிப்புகள் போல மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டறிவதற்காக, எல்.இ.டி. பல்பு தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பதிவு செய்யுமாறு, இந்திய தர நிர்ணய ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வலியுறுத்தி இருந்தது.

சீனாவின் போலியான பொருட்கள் காரணமாக இந்தியாவின் வரி வருவாய் பாதிக்கப்படுகிறது என்றும்

சீனாவின் போலியான பொருட்கள், இந்தியாவில் விற்பனை செய்வதன் காரணமாக வரி வருவாய் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்