சுஷ்மா சுவராஜின் வியக்கவைக்கும் அரசியல் பயணம்!

By sathish kFirst Published Aug 7, 2019, 10:55 AM IST
Highlights

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை செய்து வந்த சுஷ்மா சுவராஜின் வியக்கவைக்கும் அரசியல் பயணம்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை செய்து வந்த சுஷ்மா சுவராஜின் வியக்கவைக்கும் அரசியல் பயணம்.

பிஜேபியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ்,  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.  இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார்.  சுஷ்மாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். 

வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சுஷ்மாவின் அரசியல் பயணம்...

* இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவர். 

* டெல்லியின் முன்னாள் முதலமைச்சர். 

* இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ( 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை).

* முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

 * நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார். 

*டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

* பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.

* இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த இரண்டாவது பெண் ஆவார். 

*2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவர்.

*அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது.

* 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்.

* மே 2008 - 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.

* 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி மக்களவையில் பிஜேபி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

* 27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சர்.

* வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். 

சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்துவந்த, பலரும் அவரை பாராட்டி வந்தனர். 

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை! 

click me!