லதா மங்கேஷ்கர் சகோதரரை வேலையிலிருந்து நீக்கியது யார்?: காங்கிரஸை காலி செய்த பிரதமர் மோடி

Published : Feb 08, 2022, 02:39 PM ISTUpdated : Feb 08, 2022, 02:40 PM IST
லதா மங்கேஷ்கர் சகோதரரை  வேலையிலிருந்து நீக்கியது யார்?: காங்கிரஸை காலி செய்த பிரதமர் மோடி

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி மட்டும் தேசத்தில் இல்லாமல் இருந்தால், எமர்ஜென்சி வந்திருக்குமா, சீக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா, காஷ்மீரில் இருந்து  பண்டிட்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்களா. ஜனநாயகம் என்பது அவர்களின் கருணையால் கிடைக்கவில்லை என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி மட்டும் தேசத்தில் இல்லாமல் இருந்தால், எமர்ஜென்சி வந்திருக்குமா, சீக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா, காஷ்மீரில் இருந்து  பண்டிட்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்களா. ஜனநாயகம் என்பது அவர்களின் கருணையால் கிடைக்கவில்லை என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த தேசத்தில் காங்கிரஸ் கட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டு தேசத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்காது. சீக்கியர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். ஜம்மு காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள். காங்கிரஸ் நாட்டில் இல்லாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் எனக் கேட்பவர்களுக்கு இதுதான் பதில். 

 ஜனநாயகம் என்பது காங்கிரஸ் கருணையால் வந்தது என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்து நீங்கள்தான் கொலை செய்தீர்கள்.

வரலாற்றை நாங்கள் மாற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை நகர்புற நக்சல்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.தேர்தலில் தோற்கடிக்கப்படுவது, வெற்றிபெறுவது நடக்கத்தான் செய்யும். அதற்காக உங்களுடைய தோல்விகளின் வெறுப்பை மக்களிடம் திணிக்காதீர்கள்.

இந்த தேசத்தில் ஜனநாயகத்தைப்பற்றிய வாதங்கள் நூற்றாண்டுகளாக நடக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியால் வாரிசு அரசியலைக் கடந்து சிந்திக்க முடியாது.இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்பது வாரிசுஅரசியல் கொண்ட கட்சிகளால்தான். 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் வளர்சியை அனுமதிக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தேசம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

தேசம் என்ற சிந்தனை அரசியலமைப்புக்குவிரோதமாக இருந்தால், உங்கள் கட்சியின் பெயரில் ஏன் இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படுகிறது. 

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் குடும்பம் கோவாவில் இருந்தனர்.  அங்கு காங்கிரஸ் அப்போது ஆட்சியில் இருந்தது. அவரின் இளைய சகோதரர் ஹிர்தயநாத் மங்கேஷ்கரை வீரசவார்க்கர் குறித்த பாடலைப் பாடியதற்காக அவரை இந்திய வானொலி நிலையத்தைவிட்டு துரத்தியது காங்கிரஸ்தான். அவர் அப்போது வேலையில் சேர்ந்து 8 நாட்கள்தான் ஆகியிருந்த நிலையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவி்த்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!