‘நிதிஷ் குமார் நன்றிமறந்தவர், சந்தர்ப்பவாதி’…லாலு பிரசாத் யாதவ் ‘கடும் காட்டம்’….

First Published Jul 27, 2017, 8:10 PM IST
Highlights
lalu prasad yadav speak about nitheesh kumar

பா.ஜனதா கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் வீடுகள், என் குடும்பத்தினர் வீடுகளில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ரெய்டுநடத்தி, எனக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளார். நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றுராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சி மாற்றம்

பீகார் மாநிலத்தில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து ஐக்கியஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சியில் அமர்ந்தார். லாலு குடும்பத்தினர் மீதான ஊழல் புகாரையடுத்து தேஜஸ்விபதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜனதா ஆதரவுடன் நேற்று ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வரானார். 

இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் நிருபர்களிடம் கூறியது-

ஏமாற்றிவிட்டார்

நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக இருந்த, பீகார் மாநில மக்களை மட்டும் அவர் ஏமாற்றவில்லை. நாட்டு மக்களையும் ஏமாற்றிவிட்டார். 2015ம்ஆண்டு தேர்தலுக்கு முன், நிதிஷ் குமாரால் பலம் அவருக்கு தெரியும், அதனா், தன்னால், ஆட்சிக்கு வரமுடியாது என்பதை அவர் தெரிந்து கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கி முதல்வரானார்.

யார் அவர்?

மகா கூட்டணியை விட்டு விலகிய பின்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் சூழல் இல்லை என்று நிதிஷ் கூறியுள்ளார்.  ஏனென்றால் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதாம். நான் கேட்கிறேன், எங்களை கேள்வி கேட்க நிதிஷ்குமார் யார்?, அவர் என்ன சி.பி.ஐ. இயக்குனரா?, அல்லது போலீஸ் டி.ஜி.பி.யா?.

நன்றி மறந்தவர்

பா.ஜனதா கட்சியுடன் கைகோர்த்து செயல்பட்டு, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மற்றும்வருமான வரித்துறை மூலம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள், அவர்களின் குடும்பத்தார் வீடுகளில் ரெய்டு நடத்தி, என்னை அவமானப்படுத்தியுள்ளார். நன்றி மறந்த நபர் நிதிஷ்குமார்.

ஆதாரம் இருக்கா?

என் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி எந்த ஊழலும் செய்யவில்லை.அவர் ஏதாவது ஊழல் செய்து இருந்தால், நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். நிதிஷ் குமார் ஏன் குற்றவாளி என்று கூறுகிறார்?  கடந்த 20 மாதங்களாக துணை முதல்வராக இருந்தபோது, எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். யாராவது தேஜஸ்விக்கு எதிராக ஒரு புகாரையும், ஆதாரங்களையும் காட்ட முடியுமா?

பா.ஜனதா திரைக்கதை

மகா கூட்டணியை விட்டு விலக சில மாதங்களுக்கு முன்பே, நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த நாடகத்துக்கான திரைக்கதையும் பா.ஜனதா ஆளுநர் திரிபாதி உதவியுடன் தயார் செய்துள்ளது.

ஏன் அவசரம்?

மாநில சட்டசபையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிதான் தனிபெரும்பான்மை உள்ள ஒரே கட்சி, எங்களைதான் முதலில் ஆட்சி அமைக்க அழைத்து இருக்க வேண்டும். நாங்கள் தோல்வி அடைந்து இருந்தால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை அழைக்கலாம். ஆனால், ஆளுநர், பாஜனதாவின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு, மிக விரைவாக பதவி ஏற்பு விழாவை நடத்தி முடித்துள்ளார். மாலை 5 மணி பதவி ஏற்பு விழாவை காலை 10 மணியாக திடீரென மாற்றப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!