MLA வை சுட்டுக்கொன்றது பெண்களா..? வெளியானது அதிர்ச்சி புகைப்படங்கள்..!

Published : Sep 24, 2018, 08:05 PM IST
MLA வை சுட்டுக்கொன்றது பெண்களா..? வெளியானது அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சுருக்கம்

MLA வை சுட்டுக்கொன்ற பெண் மாவோயிஸ்ட் தலைமையிலான குழுவின் புகைப்படங்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MLA வை சுட்டுக்கொன்ற பெண் மாவோயிஸ்ட் தலைமையிலான குழுவின் புகைப்படங்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. சர்வேஸ்வராராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு வனப்பகுதியில் சர்வேஸ்வரா ராவை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொன்றனர். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

வட இந்தியாவில் அதிகம் உலவும் மாவோயிஸ்ட்டுகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடமாக கருதப்படும் ஒடிசா மற்றும் பீகாரில் உள்ள வனப்பகுதிகளில் அதிரடி வேட்டையும் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேச எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவர் தனது தொகுதிக்குட்பட்ட தும்ரிகுடா பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ கிசேரி சோமாவும் படுகாயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெண் தலைமையிலான மாவோயிஸ்ட்டுகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆந்திர மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். கட்சியிலிருந்து விலகி ஒருவாரம் முன்பு தெலுங்கு தேச கட்சியில் சர்வேஸ்வரா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நலையில், MLA வை சுட்டுக்கொன்ற பெண் மாவோயிஸ்ட் தலைமையிலான குழுவின் புகைப்படங்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!