
பாரதியஜனதா எம்.பி. கே.சி. படேலை ஆபாசப்படம் எடுத்து அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞரை போலீசார் இன்று கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், வல்சாத் தொகுதி மக்களவை எம்.பி.கே.சி. படேல். இவர் கடந்தவாரம் டெல்லி வடக்கு அவென்யு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், குறிப்பிட்ட அந்த பெண் வழக்கறிஞரை தனக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் காசியாபாத்தில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்ததன் பேரில் கடந்த மார்ச் மாதம் சென்றேன்.
அப்போது, குளிர்பானத்தில் ஏதோ கலந்து கொடுத்ததால், அதைக் குடித்தவுடன் நான் மயங்கிவிட்டேன். அப்போது, அந்த பெண் தன்னை ஆபாசமாகப் படம் எடுத்துவிட்டார். இப்போது அந்த புகைப்படங்களை என்னிடம் காண்பித்து ரூ.5 கோடி கேட்டு மிரட்டுகிறார் எனத் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, அந்த பெண் பதிலுக்கு எம்.பி. கே.சி.படேல் மீது டெல்லி போலீசில் புகார் செய்தார். அதில் மார்ச் மாதம் தனது வீட்டுக்கு வந்த எம்.பி. படேல், தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.அதற்கு ஆதாரமாக சி.டி. புகைபடங்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து டெல்லி போலீசார் பெண் வழக்கறிஞரிடம் விசாரணை நடந்த சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மமனை ஏற்று அந்த பெண் வழக்கறிஞர் இன்று டெல்லி வடக்கு அவென்யு போலீசில் விசாரணைக்கு ஆஜராானார்.
அப்போது, போலீசார் நீண்ட நேரம் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, புகாரில் கூறியதற்கும், விசாரணையிலும் முன்னுக்கு பின் முரணாக அந்த பெண் கூறினார். மேலும், வீட்டின் படுக்கை அறையில் ஏன் கேமிரா வைத்து இருந்தீர்கள், கற்பழிக்கப்பட்ட புகைப்படம் எப்படி கிடைத்தது என்று கிடுக்கிப்படி கேள்விகள் கேட்டனர். அதற்கு அந்த பெண் பதில் கூறமுடியாமல் திகைத்துள்ளார்.
இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வசதியானவர்களிடம் இருந்து பணம் பறிப்பதை அந்த பெண் வழக்கறிஞர் தொழிலாகச் செய்துவருவதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், திட்டமிட்டு, எம்.பி.யிடம் பணம் பறிக்கவே இந்த செயலை அந்த பெண் செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பெண் வழக்கறிஞரை, எம்.பி.கே.சி.படேலிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்தனர்.
மேலும், கடந்த 2016ம்ஆண்டு செப்டம்பர் மாதம், ஹரியானா எம்.பி. ஒருவர் மீது, திலக்மார்க் போலீஸ் நிலையத்தில் இந்த பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் அளித்து, அந்த பிரச்சினையை பின் பேசித்தீர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.